850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரீஸ் நகரில் உள்ள தேவாலயம் தீப்பற்றி எரியும் பதை பதைக்க வைக்கும் காட்சி…

பாரீஸ் நகரில் உள்ள மிகப் பழமையான புகழ் பெற்ற நாட்ரிடாம் கதீட்ரலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சர்ச்சின் பல பகுதிகள் சேதமடைந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்த பயங்கர தீவிபத்தில் நாட்ரி டாம் சர்ச்சின் முக்கியப் பகுதி சேதமடையவில்லை என்று பாரீஸ் தீயணைப்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது. தீவிபத்தால் பாரீஸ் நகரின் மேல் பகுதியில் வெந்நிற மற்றும் கரும்புகை சூழ்ந்தது. கோதிக் கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்ட மிகப் பழமையான சர்ச் இது.தீவிபத்தில் சதி வேலை ஏதும் இல்லை என நம்புவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. படு வேகமாக தீ சர்ச்சுக்குள் பரவியது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப் பிரபலமான கதீட்ரல் இது. மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் கூடியதும் கூட.


இந்த தீவிபத்து குறித்து தகவல் பரவியதும் பாரீஸ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வீடுகளை விட்டு ஓடி வந்து தீப்பிடித்து எரிவதை வேதனை மற்றும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்த சர்ச்சுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பேர் வருகை தருவார்கள். கோதிக் கலை கட்டட வடிவமைப்புக்கு பெயர் போனது இந்த நாட்ரிடாம் கதீட்ரல். இதன் மேற்கூரையானது மரத்தால் ஆனது. அது முழுவதும் தீயில் சேதமடைந்து விட்டதாம்.
தற்போது சர்ச்சில் மராமத்து பணிகள் நடந்து வந்தன. அதில்தான், தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்
850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரீஸ் நகரில் உள்ள தேவாலயம் தீப்பற்றி எரியும் பதை பதைக்க வைக்கும் காட்சி… 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரீஸ் நகரில் உள்ள தேவாலயம் தீப்பற்றி எரியும் பதை பதைக்க வைக்கும் காட்சி… Reviewed by Anton Mithushan on 12:25 PM Rating: 5

No comments

Like us